News February 25, 2026

சேலம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 25, 2026

சேலம்: பட்டா, சிட்டா இனி ஆன்லைனில்!

image

பட்டா மாற்றம் & நில அளவீடு: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள் பதிவிறக்கம்: பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் (FMB) பெற eservices.tn.gov.in தளத்தைப் பயன்படுத்தலாம்.

வரைபடங்கள்: கிராம வரைபடம் மற்றும் நில அளவை எண் விவரங்களுக்கு tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை அணுகலாம். மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 25, 2026

ஆத்தூர் அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி!

image

ஆத்தூர் மல்லியக்கரையைச் சேர்ந்த சிவலிங்கம் (25), நேற்று டூவீலரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். தாண்டவராயபுரம் அண்ணா நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2026

சேலம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்!

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவமனை மற்றும் உணவக மேலாண்மை பயில தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். +2 முடித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 25 அன்று நடைபெறும். ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக www.tahdco.com மூலம் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!