News October 8, 2025

சேலம்: நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள்

image

சேலம்: நாளை (அக்.8) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1) சூரமங்கலம் மண்டலம் ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மெய்யனூர், 2) செட்டி சாவடி மாரியம்மன் கோவில் அருகில் 3) சங்ககிரி சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை 4) இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் மண்டபம் சந்தைப்பேட்டை 5) கொளத்தூர் பி டி ஆர் திருமண மண்டபம் குரும்பனூர் 6) தலைவாசல் சமுதாய கூடம் வரகூர் 7) ஆத்தூர் கிராம சேவை கட்டிடம் அருகில் பைத்தூர்.

Similar News

News November 9, 2025

சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தி குத்து!

image

சேலம், சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார், இவர் கல்குவாரி உரிமையாளர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இது தெரிய வந்ததும், அந்த பெண்ணின் கணவர் சசிகுமாரை மிரட்டி, கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சசிகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 9, 2025

இணைய மோசடிகள் குறித்த புகாருக்கு 1930 அழைக்கவும்!

image

இணையவழி மோசடி மற்றும் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எந்தவொரு இணையவழி சைபர் குற்றத்திற்கும் இரையாகினால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

News November 9, 2025

சேலம் வழியாக கொல்லம் சிறப்பு ரெயில் இயக்கம்!

image

காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.07103/07104) இயக்கப்படும் என ரெயில்வே முதுநிலை வணிக ஆய்வாளர் ஏ.ஜனார்தன் தெரிவித்துள்ளார் .இந்த ரெயில் வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 5, 12, 19 மற்றும் ஜனவரி 9, 16, 2026) காலை 11 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும். அதிகாலை 3.25 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.

error: Content is protected !!