News March 22, 2024

சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கீடு

image

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாமகவுக்கு சேலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்‌ சேலம் மாவட்ட பாமக‌ நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே சேலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாமக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Similar News

News August 15, 2025

சேலம் வழியாக ஷிமோகாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக திருநெல்வேலி- ஷிமோகா இடையே சிறப்பு ரயில்களை (06103/06104) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வரும் ஆக.17- ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து ஷிமோகா டவுனுக்கும் ஆக.18- ஆம் தேதி ஷிமோகாவில் இருந்து திருநெல்வேலிக்கும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவித்தனர்.

News August 15, 2025

மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற முகவரியில் வருகின்ற 30 10 2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்

News August 15, 2025

சேலத்தில் இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி

image

இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி வீட்டு மின் உபயோக பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி 30 நாட்கள் நடைபெறுகிறது. Home Electrical Appliance Service தேநீர், மதிய உணவு, சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் இலவசம். 10வது வகுப்பு தேர்ச்சி, 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சியில் சேரலாம். ஆக.22-க்குள் அடையாள சான்று நகல்களுடன் நேரில் விண்ணப்பிக்கவும். R.R.திருமண மண்டபம், கொண்டலாம்பட்டி, சேலம்.

error: Content is protected !!