News April 16, 2024
சேலம்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

சேலம் உருக்காலை திட்டத்திற்காக கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டு மாற்று இடமாக வட்டமுத்தாம்பட்டி காமராஜ் நகரில் இடம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை கொடுக்கப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே மக்களவை தேர்தலை புறக்கனிக்க போவதாக அப்பகுதி மக்கள் இன்று அறிவித்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 23, 2025
சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

சேலம் மாவட்டத்தில் (ஆக.23) இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
▶️காலை 9 மணி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நலத்திட்ட பணிகள் துவக்கம் சுற்றுலாத் துறை அமைச்சர்.
▶️காலை 10 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாவட்ட மாநாடு துவக்கம் குஜராத்தி திருமண மண்டபம் ஐந்து ரோடு.
▶️ காலை 10:30 ராமகிருஷ்ணா ஆசிரமம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ராமகிருஷ்ண மடம்.
News August 23, 2025
சேலத்தில் ஆக.30க்குள் இதை செய்ய வேண்டும்!

சேலம் மாவட்டங்களில் உள்ள ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள், புதிதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள், புதிதாக மேம்படுத்தப்பட்ட <
News August 23, 2025
சேலம்: மகளிர் உரிமைத்தொகை கேட்டு 75,830 விண்ணப்பம்!

கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆக.21- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 65,658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கலைஞர் உரிமைத்தொகைக் கேட்டு மட்டும் சுமார் 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.