News August 14, 2025

சேலம்: தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

image

சேலம் மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு தடுப்பூசிப் போடும் பணியைத் தொடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அந்த பகுதியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் முதல் கட்டமாக வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News

News August 14, 2025

700 ஆண்டுகள் பழமை: பள்ளி மாணவர்கள் அசத்தல்!

image

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கொடுத்த தகவலின்படி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் அன்பரசி, விஜயகுமார் மாணவர்களுடன் சென்று ஆய்வு செய்தபோது அது 700 ஆண்டுகள் பழமையான, 13-ஆம் நூற்றாண்டு போர் வீரன் நடுகல் என உறுதி செய்யப்பட்டது.

News August 14, 2025

சேலம்: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

image

சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 20.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 14, 2025

விமான கட்டண உயர்வால் சேலம் பயணிகள் அதிர்ச்சி!

image

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சேலம்-சென்னை-சேலம் இண்டிகோ விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு விமான கட்டணம் ரூ.4,948 ஆகவும், சென்னையில் இருந்து சேலத்திற்கு ரூ.7,283 ஆகவும் கட்டணம் நிர்ணயம் உள்ளது.

error: Content is protected !!