News January 24, 2026

சேலம் – திருத்தணி இடையே ரயில்: ஜனவரி 27 முதல் இயக்கம்

image

சேலம் வழியாக சார்லபள்ளி – திருவனந்தபுரம் இடையே புதிய அம்ரித் பாரத் வாராந்திர ரயில் ஜனவரி 27 முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் வந்து திருத்தணி வழியாகச் செல்லும். மறுமார்க்கத்தில் புதன் மாலை கிளம்பி வியாழன் காலை சேலம் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 4, 2026

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கோரி மனு

image

சேலத்தில் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள விஜய் மக்கள் சந்திப்பிற்காக இரண்டு இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் மகுடஞ்சாவடி மற்றும் மாநகர பகுதியில் சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு, மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் காவல்துறையினரிடம் மனு அளித்தார்.

News February 4, 2026

சேலம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 4, 2026

மயிலாடுதுறை – சேலம் பயணிகள் கவனத்திற்கு

image

பராமரிப்புப் பணி காரணமாக, மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811) பிப். 6, 10, 13 தேதிகளில் வீரராக்கியம் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக, சேலம் – மயிலாடுதுறை ரயில் (16812) அதே தேதிகளில் சேலம் – கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு, கரூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தைக் கவனித்துத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

error: Content is protected !!