News December 26, 2025

சேலம் திமுக நிர்வாகி சுட்டுக் கொலை!

image

கடந்த மாதம் 21-ம் தேதி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் , கீழ்நாடு ஊராட்சி, கிராங்காட்டை சேர்ந்த தி.மு.க. கிளைச் செயலாளர் ராஜேந்திரனை, நிலத் தகராறு காரணமாக அவரது உறவினர் ராஜமாணிக்கம் கடந்த மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். சிறையிலுள்ள ராஜமாணிக்கம் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Similar News

News December 28, 2025

பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் வருகை

image

சேலத்தில் நாளை பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சேலம் வருகை தந்தார். அவரை சேலம் மாநகரம் மாவட்ட பாமக செயலாளரான அருள் எம்.எல்.ஏ தலைமையிலான பாமக நிர்வாகிகள் வரவேற்றனர். நாளை கூட்டத்திற்கு அனைவரும் வருகை தரும்படி பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 28, 2025

சேலம்: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> https://parivahansewas.com/ <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News December 28, 2025

BREAKING: ஓமலூர் EX எம்எல்ஏ நீக்கம்: இபிஎஸ் அதிரடி

image

அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அண்மையில் தவெக முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியதாகவும், குறிப்பாகச் செங்கோட்டையனை சந்தித்துத் தவெகவில் இணைந்ததாக புகைப்படங்கள் கசிந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!