News September 16, 2025
சேலம்: தவெக தலைவர் விஜய் வருகை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப்பயணம் சேலத்தில் மேற்கொள்ள உள்ள நிலையில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரிடம் அனுமதி கேட்டு சேலம் மத்திய மாவட்ட த.வெ.க செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று மனு வழங்கியுள்ளனர்.
Similar News
News September 16, 2025
சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 16, 2025
2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!

பல்வேறு புகார்களுக்கு உள்ளான பூலாம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ. பரமசிவம், மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ. மணி, ஆகிய 2 பேரையும் அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 2 எஸ்.ஐ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூபாய் 337.46 கோடி பயிர்க்கடன்!

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 3,89,785 விவசாயிகளுக்கு ரூபாய் 3,266.35 கோடி பயிர்க்ககடன்களும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் ரூபாய் 1,038 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 34,434 விவசாயிகளுக்கு ரூபாய் 337.46 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.