News December 10, 2025
சேலம்: டிசம்பர் 11 கடைசி நாள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சிறப்பு திருத்த முறை 2026 வாக்காளர் பட்டியலில், வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர்-11ம் தேதிக்குள் வழங்க வேண்டும், என ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சேலத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, திரும்ப வழங்காதவர்கள் உடனடியாக வழங்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News March 8, 2026
சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 8, 2026
சேலம்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 8, 2026
ஏற்காட்டில் தீவிர சோதனை!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால், சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் காட்டுத்தீயைத் தடுக்க வனத்துறை தீவிர முன்னெச்சரிக்கை எடுத்துள்ளது. ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்சேர்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


