News April 7, 2024

சேலம்: டிக்கெட் இன்றி பயணித்தோருக்கு அபராதம்

image

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 2 லட்சத்து 74 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.19 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 22% அதிகம் என நேற்று(ஏப்.6) தெற்கு ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டிக்கெட் இன்றி முறைகேடாக பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Similar News

News November 7, 2025

சேலம்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News November 7, 2025

சேலம்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

image

சேலம் மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

சேலம்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

1) சேலம் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!