News August 26, 2025
சேலம் கோட்டம் சார்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி, வளர்பிறை முகூர்த்தத் தினங்கள், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஆக.26) முதல் செப்.01 வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 26, 2025
முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்க சேலத்தில் 54,157 பேர்!

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு சேலம் மாவட்டத்தில் பள்ளி பிரிவில் 35,996 பேரும்,கல்லூரி பிரிவில் 7,633 பேரும்,மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2,165 பேரும்,அரசு ஊழியர்கள் பிரிவில் 1,625 பேரும், பொதுப்பிரிவில் 6,738 பேரும் என மொத்தம் 54,157 பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.
News August 26, 2025
சேலம் மக்களே இந்த நம்பர் தெரிஞ்சு வச்சுக்கோங்க!

சேலம் மக்களே மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு அலுவலக எண்கள்;
☎️ஆத்தூர் – 04282-240801
☎️எடப்பாடி – 04283-222922
☎️மேட்டூர் – 04298-225001
☎️மேட்டூர் தெர்மல் – 04298-240397
☎️ஓமலூர் – 04290-220101
☎️சேலம் – 04272-211603
☎️சங்ககிரி – 04283-240555
☎️நங்கவள்ளி – 04298-266101
☎️கெங்கவல்லி – 04282-232101
☎️வாழப்பாடி – 04292-222101
☎️கருமந்துறை – 04292-244801 SHARE பண்ணுங்க மக்களே!
News August 26, 2025
சேலம்: காலை உணவு திட்டத்தில் 11,488 பேர் பயன்பெறுவர்!

காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசு உதவிபெறும் 2,429 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்து இன்று (ஆக.26) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் மொத்தம் 61 பள்ளிகளில் 11,488 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.