News January 28, 2026
சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தைப்பூசம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களிலிருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 1,900 பேருந்துகளுடன் இந்த கூடுதல் பேருந்துகளும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.
Similar News
News January 28, 2026
சேலம்: ஒரே நாளில் 20 கோயில்களில் கும்பாபிஷேகம்!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று சேலம் சரகத்திற்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சேலம் இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயில், பனமரத்துப்பட்டி மகா கணபதி கோயில் மற்றும் நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
News January 28, 2026
சேலம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <
News January 28, 2026
FLASH: வாழப்பாடியில் தட்டிதுக்கிய விஜய்!

வாழப்பாடி முன்னாள் தேமுதிக ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில், சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபனுடன் சென்று அவர் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தேமுதிகவில் 14 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


