News March 20, 2025

சேலம் கோட்டத்தின் சார்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாட்களையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (மார்ச் 21) முதல் மார்ச் 24- ஆம் தேதி வரை 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று சேலம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 20, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் போது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.20 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 20, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று(20.3.25) இரவு 11 முதல் காலை 6 மணி வரை சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய உட் கோட்டாவில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலரின் விவரங்கள் மேலே குறிப்பிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன

News March 20, 2025

புதிய தேரோட்டம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

image

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் புதிய தேரோட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதிகள், தேரோட்டம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும், அரசாணையினைப் பின்பற்றவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

error: Content is protected !!