News January 31, 2026
சேலம்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 8, 2026
சேலம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
தாரமங்கலம் அருகே பேரதிர்ச்சி!

தாரமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற வேப்பமரத்து காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. இத்திருவிழா முடிந்து நேற்று முன்தினம் கோயிலுக்கு மறுபூஜை செய்ய பூசாரிகள் (ம) ஊர் பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது, அம்மன் சிலையில் இருந்த 2.5 பவுன் தங்க தாலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 8, 2026
சேலம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE பண்ணுங்க)


