News March 19, 2024
சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி!

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். பிரச்சார வாகனத்தின் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Similar News
News September 18, 2025
நாளை எங்கெங்கு முகாம் தெரியுமா மக்களே?

சேலம் சதுரங்காடி, கற்பகம் திருமண மண்டபம், ஓமலூர், செவ்வாய்சந்தை ரோட்டில் உள்ள சமுதாயக்கூடம், மல்லமூப்பம்பட்டியில் சாந்தி ராதாகிருஷ்ணன் திருமண மாளிகை, குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நாளை (செப்.19) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு நடைபெறுகிறது. இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அழைப்பு!
News September 18, 2025
சேலம்: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

சேலம், ஓமலூரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
News September 18, 2025
திமுகவின் இரட்டை நிலைப்பாடு-இபிஎஸ் விமர்சனம்

சேலம் ஓமலூரில் செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக மாறியதும் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டையும் தி.மு.க கொண்டிருப்பதாகக் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது விமர்சித்தவர்களுக்கு இப்போது ரத்தினக் கம்பளம் விரிப்பதாகவும் அவர் சாடினார்.