News December 18, 2025
சேலம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில், குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் விஜயா முன்னிலையில், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள், சிறப்பு சிறார் காவல் உதவி பிரிவு ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆகியோருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குழந்தை நேய முறையில் அணுகுதல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
Similar News
News December 20, 2025
ஆத்தூர் அருகே துடிதுடித்து பலி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த செல்லதுரை (42). பெயிண்ட் தொழிலாளியான இவர் நேற்று தாண்டவராயபுரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஏறி முருங்கை கீரை பறித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஒயர் மீது மோதியதில், மின்சாரம் பாய்ந்து செல்லதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 20, 2025
சேலம் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

சேலம்: அழகாபுரம் பிடாரியம்மன் கோவில் அருகே கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த வசந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றப் பிணையில் (Bail) வெளியே வந்த வசந்தா, அதன்பின்னர் நீதிமன்ற விசாரணைகளுக்கு முறையாக ஆஜராகாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வசந்தா கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டர்