News September 11, 2025
சேலம் காவல்துறை அசத்தல் அறிவிப்பு!

சேலம் மாநகர காவல்துறை சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் “உங்கள் வாகனங்களில் டேஷ் கேமரா பொருத்தி, அதைப் புகைப்படம் எடுத்து சேலம் மாநகர காவல் துறையின் முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும். இவ்வாறு பதிவிடும் முதல் ஐந்து நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை கார் வைத்துள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 11, 2025
சேலம்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

சேலம் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற இலவச எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும்.SHARE IT NOW
News September 11, 2025
சேலம்: நடுரோட்டில் பீர் பாட்டில் சண்டை!

வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (38). வாழப்பாடி அய்யாகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (37). இருவரும், புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை முன், நேற்று இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு குத்திக்கொண்டனர். இதுகுறித்து தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற வாழப்பாடி போலீசார், இருவரையும் மீட்டு, விசாரிக்கின்றனர்.
News September 11, 2025
சேலம் செப்டம்பர் 11 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலத்தில் செப்.11 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9 மணி முண்டாசு கவி மகாகவி பாரதியாரின் நினைவு நாள் டவுன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் பாரதியார் சிலைக்கு பல தரப்பினர் மாலை அணிவித்தல் ▶️காலை 10 மணி சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு அரசு நிகழ்ச்சி ▶️காலை 10 மணி பெரியார் பல்கலைக்கழகத்தில் விளைவு சார் கல்வி பயிற்சி பட்டறை