News April 22, 2025
சேலம் கள்ளத்துப்பாக்கி ரூ 3 லட்சம் அபராதம்

சேலம் மஞ்சவாடி காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் வகையில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த சேலத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 39), சுகில் குமார் (வயது 30) ஆகிய இருவரை கைது செய்த வனத்துறையினர் இருவருக்கும் தலா ரூபாய் 1.50 லட்சம் அபராதம் விதித்தனர். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.
Similar News
News December 28, 2025
சேலத்தில் சம்பவ இடத்திலேயே பலி!

சேலம் பள்ளப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (கூலித் தொழிலாளி). இவர் வேலைக்குச் செல்வதற்காக பள்ளப்பட்டி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, எதிர்பாராதவிதமாக பார்த்திபன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார், உடலைக் கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 28, 2025
சேலம்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

சேலம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)
News December 28, 2025
வாழப்பாடியில் வசமாக சிக்கிய ஆசிரியர்கள்!

வாழப்பாடி: பேளூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 பயின்ற 17 வயது மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஜெகதீசன் மற்றும் தினகரன் ஆகியோர் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு ஆசிரியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


