News September 14, 2025

சேலம் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

image

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன் தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, அவர் 20 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

சேலம்: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 14, 2025

சேலத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்!

image

சேலத்தில் இன்றைய (செப்.14)  இறைச்சி மற்றும் மீன் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆட்டிறைச்சி கிலோ ரூ.800, பிராய்லர் கோழிக்கறி கிலோ ரூ.200, நாட்டுக் கோழி கிலோ ரூ.480, மீன் வகைகளில் ரோகு ரூ.200, கட்லா ரூ.220, ஆத்துபாறை ரூ.220 என விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் பகுதி இறைச்சி என்ன விலை மக்களே கமெண்ட் பண்ணுங்க!

News September 14, 2025

சேலம் மக்களே இனி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

error: Content is protected !!