News January 13, 2026
சேலம்: கல்லூரி மாணவியை கொன்று காசிக்குத் தப்பியோட்டம்?

திருநெல்வேலி வீரவநல்லூரைச் சேர்ந்த ஓமியோபதி மாணவி வர்ஷினி, கடந்த 6-ஆம் தேதி சேலத்திலுள்ள விடுதியில் படுகொலை செய்யப்பட்டார். திருமணமானவருடன் மகளுக்கு இருந்த காதலால் ஆத்திரமடைந்த தந்தை வரதராஜனே இக்கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தலைமறைவான அவர் ரயில் மூலம் காசிக்குத் தப்பிச் சென்றது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரைப் பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் தற்போது காசிக்கு விரைந்துள்ளனர்.
Similar News
News January 17, 2026
சேலம்: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 17, 2026
சேலம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சேலம் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம்.ஷேர்!
News January 17, 2026
சேலத்தில் வசமாக சிக்கிய பெண்!

சேலம் மூணாங்கரடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கிச்சிபாளையத்தைச் சேர்ந்த கனிமொழி (47) என்பவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். தகவலின் பேரில் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


