News September 19, 2025
சேலம்: கலைஞர் உரிமைத்தொகை 1,10,393 மனு வழங்கல்!

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான பொதுமக்கள் மனுக்களை வழங்கி வருகின்றனர். அதன்படி கலைஞர் உரிமைத்தொகை கேட்டு மட்டும் 1,10,393 மனுக்கள் வழங்கியுள்ளதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
சேலம்: B.E./B.Tech படித்தவர்களுக்கான வேலை!

சேலம் மக்களே, Numaligarh Refinery Limited காலியாக உள்ள 98 Graduate Engineer Trainee, Assistant Officer Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 19, 2025
சேலம் வழியாக தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.22, 29,அக்.06,13,20 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கும், மறுமார்க்கத்தில், செப்.23,30,செப்.07,14,21 தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
News September 19, 2025
சேலம் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

சேலம் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!