News September 24, 2024
சேலம் கலெக்டருக்கு ஐகோர்ட் வாரண்ட்

சேலம், ஆட்டையாம்பட்டி பஞ்சாயத்து செயலாளராக இருந்த மூர்த்தி முறைகேடு புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2017-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றம் வேறு இடத்தில் பணி வழங்க உத்தரவிட்டும் வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணைக்கு சேலம் ஆட்சியர் ஆஜராகததால் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Similar News
News August 25, 2025
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்!

சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி வரை, காந்தி விளையாட்டு மைதானத்தில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்துகொண்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
உர உற்பனையில் முறைகேடு கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து!

சேலம் மாவட்டத்தில் உர விற்பனையில் முறைகேடு கண்டறியபட்டால் விற்பனை உரிமம் ரத்துச் செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் எச்சரித்துள்ளார். நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரங்களை இருப்பு வைப்பதுடன் யூரியா உரங்களை சரியான அளவில் கொள்முதல் செய்து முறையாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். யூரியா பதுக்கல் மற்றும் கடத்தல் போன்ற நிகழ்விற்கு துணை போகக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.24) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.