News January 16, 2026
சேலம் – கந்தம்பட்டி மேம்பாலத்தில் பயங்கரம்!

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
சேலம் மாணவி கொலை: ரூ.25,000 சன்மானம் அறிவிப்பு

சேலத்தில் ஓமியோபதி படித்து வந்த நெல்லை மாணவி வர்ஷினியை, தந்தை வரதராஜன் கடந்த 6-ஆம் தேதி படுகொலை செய்தார். பின்னர் தலைமறைவான அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது சென்னையில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைப் பற்றித் துப்பு கொடுத்தால் ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் எனப் போலீசார் அறிவித்துள்ளனர். தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்.
News January 22, 2026
சேலம் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.