News October 2, 2024
சேலம்: கடப்பாரையால் தோண்டும் போது நேர்ந்த விபரீதம்

இன்று சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த ஆலடிப்பட்டியைச் சேர்ந்த இளையராமன் (47) என்பவர் பெருமாப்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில், கடப்பாரையால் நிலத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலத்தின் அடியில் இருந்த மின் கேபிள் மீது கடப்பாரை உராய்வு ஏற்பட்டு மின்சாரம் தாக்கிய நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News August 25, 2025
அரசு கண்காட்சி 17 நாட்கள் 30,000 பார்வையாளர்கள்!

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் அரசு பொருட்காட்சி கடந்த 4ம் தேதி துவங்கியது. இன்று வரை 17 நாட்கள் நடைபெற்ற இந்த அரசு பொருட்காட்சியை 25,191 பெரியவர்களும், 4,108 சிறியவர்களும், கண்டு ரசித்துள்ளனர். 26 அரசுத்துறைகள் ஆறு அரசு சார்பு நிறுவனங்கள் என 32 அரங்குகளும், பொழுதுபோக்குகளும் கொண்ட கண்காட்சி வருகின்ற 21.9.2025 வரை நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்!

சேலம் மாவட்டத்தில் 25.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்; சேலம் டவுன் D. பழனியம்மாள் (94981-67715), அன்னதானப்பட்டி பழனி (94981-84845), கொண்டலாம்பட்டி சின்ன தங்கம் (94981-68290), அம்மாபேட்டை நந்தகுமார் (94981-02546) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 25, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.25) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.