News January 21, 2026
சேலம்: ஒரே ஆண்டில் 377 போ் பலி!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சேலம், தருமபுரி, ஓசூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் எல்லைகளில் மொத்தம் 377 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தைக் கடப்பது மற்றும் கவனக்குறைவே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News January 30, 2026
சேலத்தை அலற வைத்த சம்பவம்

சேலம் சூரமங்கலத்தில் உள்ள சேலத்தாம்பட்டியில் வெள்ளிக்கடை நடத்தி வரும் சுமதி என்பவர் கடையில் தனியாக இருந்தபோது, ஹெல்மெட் அணிந்த நபர் பொருள் வாங்குவது போல் நடித்து அவர் மீது மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயன்றார். சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் மர்ம நபர் தப்பியோடினார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
BREAKING: ஆத்தூரில் தாய், மகள் தற்கொலை

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (57). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 12 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். லட்சுமிக்கு 6 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் 5 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், 3-வது மகள் தீபவேணிக்கு திருமணம் ஆகாதது மற்றும் கடன் தொல்லை அதிகரித்தது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
News January 30, 2026
POWER CUT: சேலம் மாவட்டத்தில் இங்கெல்லாம் மின்தடை

சேலம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, இடைப்பாடி, ஆவணியூர், முப்பனூர், சவுரிபாளையம், தாதாபுரம், ஜலகண்டபுரம், நந்தவனம், ஆடையூர், ராமகவுண்டனூர், விராலிகாடு, பூசாரியூர், செலவடை, மின்னாம்பள்ளி, காட்டூர், வலசையூர், தாதனூர், பூசாரிப்பட்டி, செல்லியம்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், வீரகவுண்டனூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகள் ஆகும்.


