News January 20, 2025
சேலம்-உளுந்தூர்பேட்டை இடையே 13 மேம்பாலம்!

சேலம்- உளுந்தூர்பேட்டை இடையே விபத்துகளை குறைக்க ரூபாய் 252 கோடி மதிப்பீட்டில் 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விபத்து நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கும் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 10, 2025
உங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க அரிய வாய்ப்பு

சேலம் மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை, ஜூலை முதல் செப்டம்பர் வரை அனைத்து நாட்களிலும், மாவட்ட சமசர மையம் மற்றும் தாலுகா சமரச மையங்களில் நேரடியாகவோ, வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை, வழக்காடிகள் அனைவரும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கேட்டுக் கொண்டுள்ளார்.
News July 10, 2025
ரூ.320க்கு ₹15 லட்சம் விபத்து காப்பீடு; இன்றே பதிவு செய்யுங்கள்

“இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு வெறும் ரூ.320, 550, 799 பிரீமியத்தில் 15 லட்சம், 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு அறிமுகம். இன்று முதல் (ஜூலை 10) சிறப்பு விபத்துக் காப்பீடு பதிவு கடைப்பிடிக்கப்படவுள்ளதால் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் பதிவுச் செய்து கொள்ளலாம்” என சேலம் அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க
News July 10, 2025
சேலம் ஜூலை 10 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 10 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி தமிழ்நாடு அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️காலை 10:15 மணி சோனா கல்லூரியில் முதலாம்ஆண்டு வகுப்புகள் துவக்க விழா▶️ 12 மணி இந்திய புரட்சிகர சோசலிஸ்ட் இயக்கம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️ மாலை 6 மணி குரு பூர்ணிமா பூஜைகள்