News October 14, 2025

சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

சேலம் அக்டோபர் 14 இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்1) ஆத்தூர் அண்ணா கலையரங்கம் 2) சேலத்தாம்பட்டி தேன்மொழி மண்டபம் பனங்காடு 3)அயோத்தியாபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலகம் டி. பெருமாபாளையம் 4)பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி திருமண மண்டபம் வடக்கு நாடு 5)ஓமலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் பெரியேரிபட்டி 6)மேச்சேரி கே வி எஸ் மஹால் ஓலைப்பட்டி

Similar News

News October 14, 2025

சேலம்: VOTER ID இருக்கா உடனே இத பண்ணுங்க!

image

சேலம் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். <>இந்த இணையதளத்தில் <<>>உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர்!

News October 14, 2025

சேலம் அருகே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி!

image

சேலம்: கன்னங்குறிச்சி மின் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் துரைசாமி (55). இவர் நேற்று கன்னங்குறிச்சிக்குட்பட்ட குமரன் நகர் மின்மாற்றியில் (Transformer) மேலே ஏறி பராமரிப்புப் பணி மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, மேற்புறம் சென்றுகொண்டிருந்த கம்பியில் இவருடைய கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News October 14, 2025

கிட்னி புரோக்கர்கள் சேலம் சிறையில் அடைப்பு!

image

நாமக்கல்லில் வறுமையில் வாடும் தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.விசாரணையில் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் மோகன் (48), ஆனந்தன் (45) ஆகிய இருவரும் கிட்னி விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!