News November 1, 2025
சேலம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

சேலம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
Similar News
News November 1, 2025
சங்ககிரி: 16½ பவுன் நகை, பணம் திருட்டு!

சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் கிராமம் சுண்டகாயன்காடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மல்லிகா (52), நேற்று மாலையில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் உள்ள 16 பவுன் நகை மற்றும் ரூ.50,000 திருடப்பட்டு போனது தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 1, 2025
சேலம்: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 1, 2025
வாழப்பாடி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்!

வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி புஷ்பாவின் 80 அடி ஆழ கிணற்றில் நேற்று மதியம் ஆண் பிணம் மிதந்தது. மேலும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் வந்து பிணத்தை மீட்டனர். வயது 30–35, நீல டீ-ஷர்ட் மற்றும் சிமெண்டு நிற அரை பேண்ட் அணிந்தவராகத் தெரிய வந்தார். முகம் சிதைந்து அழுகிய நிலையில் இருந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி விசாரணை நடத்தினர்.


