News September 20, 2025

சேலம்: இளைஞர்கள், இளம் பெண்கள் கவனத்திற்கு!

image

தமிழ்நாடு அரசு சார்பில் உதவித்தொகையுடன் சேலத்தில் குறுகிய கால இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்புடன் ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 98940-68340, 96988-39000 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். மக்களே, SHARE பண்ணுங்க!

Similar News

News September 20, 2025

சேலம்: சிறப்பு மருத்துவ முகாம்களில் 9,552 பேர் பயன்!

image

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 6 மருத்துவ முகாம்களில் 4,325 ஆண்களும், 5,227 பெண்களும் என மொத்தம் 9,552 பேர் கலந்து கொண்டு பயன்பெற்று உள்ளனர். இதில் 7,427 பேருக்கு இரத்தப் பரிசோதனையும். 5,603 பேருக்கு இசிஜி பரிசோதனையும், 1,040 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 1,143 பேருக்கு எக்கோ பரிசோதனையும், 787 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும், மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் தகவல்.

News September 20, 2025

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 88 பேருக்கு பணி!

image

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேற்று நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 33 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களைத் தேர்வுச் செய்தனர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 88 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் நிலைத்தேர்வுக்காக 44 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குநர் மணி செய்திருந்தார்.

News September 20, 2025

108 ஆம்புலன்ஸ் மூலம் 73 ஆயிரம் பேர் பயன் தகவல்!

image

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கடந்த எட்டு மாதங்களில் விபத்து மற்றும் நாய் கடி, பாம்பு கடி, பிரசவ வலி, உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் எட்டு மாதத்தில் 73 ஆயிரத்து 716 பேர் பயனடைந்துள்ளனர். என சேலம் 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!