News January 13, 2026

சேலம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

Similar News

News January 25, 2026

FLASH: சேலம் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ விருது!

image

இந்தியாவின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிற்பக் கலைத்துறையில் சாதனை படைத்த இவர், தஞ்சைப் பெரிய கோயிலின் பாம்பு சிற்பம் மற்றும் குடியாத்தத்தில் உள்ள 13 அடி உயர நடராஜர் சிலையையும் செதுக்கியவர். குடியரசு தினத்தை முன்னிட்டு இவரது கலைப்பணியைப் பாராட்டி மத்திய அரசு இந்த உயரிய விருதை அறிவித்துள்ளது.

News January 25, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 25, 2026

ரயில்களில் தீவிர பாதுகாப்பு சோதனை!

image

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிஎஸ்பி பாபு மற்றும் பாதுகாப்பு ஆணையாளர் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான போலீசார், ரயில்களில் தீவிர சோதனை நடத்தினர்.மேலும் பயணிகள் உடைமைகள், நடைமேடைகள்,பார்சல் அலுவலகம் மற்றும் ஓய்வறைகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடப்பட்டது.

error: Content is protected !!