News August 15, 2025
சேலம்: இலவச கண் சிகிச்சை முகாம்

அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க இணைந்த்து நடத்தும், இலவச கண் சிகிச்சை முகாம் வரும் ஆக.17ஆம் தேதி அம்மாப்பேட்டையில் எஸ்.பழனியாண்டி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது. காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். மேலும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, போன் நம்பர் போன்ற ஆவணங்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
சேலம்: 100 கிலோ உப்பால் தேசிய கோடி!

எடப்பாடி பேருந்து நிலையத்தில் நமது நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 100 கிலோ உப்பால் நமது நாட்டின் வரைபடத்தை வரைந்து நம்ம அறக்கட்டளை மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மேலும் இதில் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் ஆகிய மதம் மூவர்ணங்களில் வரையப்பட்டுள்ளது. முப்பால் வரையப்பட்டுள்ள இந்திய வரைப்படத்தை ஆர்வத்துடன் பொதுமக்கள் ரசித்து வருகின்றனர்.
News August 15, 2025
தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவித்த ஆட்சியர்!

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்த ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டு சுதந்திர போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
News August 15, 2025
சேலம்: B.E/B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

சேலம்: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த <