News August 30, 2025

சேலம் : இருசக்கர வாகனம் மீது கார் மோதி உயிரிழப்பு

image

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழனியாபுரி பகுதி சேர்ந்த செல்லமுத்து என்பவர் கடைக்கு சென்று விட்டு மீண்டும் பழனியாபுரி சென்ற போது பழனியாபுரி பிரிவு சாலை அருகே சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

சேலத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சேலம், கோவை, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 17) மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 17, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

image

ஈரோடு-ஜோக்பானி (பீகார்) இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்பு ரயில் வரும் செப்.25- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சேலம், காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

News September 17, 2025

சேலம்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

சேலம் பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!