News October 21, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News October 21, 2025
7-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை இன்று 120 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் ஏழாவது முறையாக அணை நிரம்பி வரலாறு படைத்துள்ளது. தற்போது அணையின் நீர் நிலை 14,420 கன அடியாகவும், வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது. பருவமழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
News October 20, 2025
சேலம் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

சேலம் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 20, 2025
சேலம்: தீபாவளி விடுமுறை வெளியான குட் நியூஸ்!

தீபாவளி பண்டிகை இன்று (அக்.20) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை (அக்.21) கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை முடிந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அக்.21 முதல் 23 வரை சுமார் 15,129 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து குறித்த தகவல் மற்றும் புகார்களுக்கு 9445014436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.