News February 2, 2025
சேலம் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் இன்றைய (பிப்ரவரி 2) முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9 மணி தமிழக வெற்றி கழகம் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நல உதவிகள் வழங்கல். 2) காலை 10 மணி தமிழ்நாடு வெள்ளி வியாபாரிகள் நல சங்க விழா சிவதாபுரம். 3) காலை 10 மணி மாமாங்கம் அருகே தனியார் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் துவக்க விழா. 4) மாலை 5:30 மணி மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் நூல் வெளியீட்டு விழா வாசவி மஹால்
Similar News
News March 1, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News March 1, 2026
சேலம் அருகே பேருந்து மோதி ஒருவர் பலி

சேலம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த சௌந்தரராஜன் (27), இன்று அயோத்தியாபட்டணம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுக்கம்பட்டி மயானம் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 1, 2026
சேலம்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.


