News April 13, 2025
சேலம் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஏப்ரல் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 9 மணி குருத்தோலை ஞாயிறு வைபவத்தை ஒட்டி ஊசி மாதா கோயிலில் சிறப்பு பவனி▶️ காலை 10 மணி வக்பு சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்)▶️ மாலை 6 மணி வகுப்பு வரை கட்டத்தை திரும்ப பெறக்கோரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொதுக்கூட்டம் (கோட்டை மைதானம்)▶️ மாலை 7 மணி ஹாரிஸ் ஜெயராஜ் இன்னிசைக் கச்சேரி (மூன்றோடு)
Similar News
News April 15, 2025
Ghibli க்கு நோ சொல்லுங்க; சேலம் சைபர் கிரைம் எச்சரிக்கை!

Ghibli-புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக சேலம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.
News April 15, 2025
சேலம் மாவட்ட வழங்கல் சங்கத்தில் வேலை!

சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் கணக்காளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடத்திற்கு வெளிக்கொணர்வு முகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ மேலாளர், சூரமங்கலம் நகர்ப்புற வாழ்வாதார மையம், அறை எண்.207, 2-ம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.
News April 15, 2025
சேலம்: இரவு ரோந்து போலிசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.