News January 10, 2026
சேலம்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News January 22, 2026
சேலம்: உணவில் தரம் இல்லையா ? இத பண்ணுங்க!

சேலம் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் சாலையோரக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவின் தரம் அல்லது சுகாதாரத்தில் குறைபாடுகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம். உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
சேலம்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 22, 2026
சேலத்தில் அதிரடி தீர்ப்பு!

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அர்ஷத் அலி(40), தனது மனைவி பல்கிஷை(28) வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால், திருமணமான ஏழே மாதங்களில் பல்கிஷ் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அம்மாபேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அர்ஷத் அலியை கைது செய்தனர். மேலும் சேலம் மகளிர் நீதிமன்றம், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அர்ஷத் அலிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.


