News September 27, 2025

சேலம் அருகே விபத்து 50 பேர் காயம்!

image

சேலம்: கொளத்தூர் அருகே உள்ள கண்ணாமூச்சி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வேலை முடிந்து மாலை சரக்கு வேனில் வீடு திரும்பினர். மூலப்பனங்காடு அருகே அந்த சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் சென்ற 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

Similar News

News November 10, 2025

சேலம் மாவட்டத்தில் கரண்ட் கட்!!

image

சேலம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.11) காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, கருமாபுரம், எம்.பெருமாபாளையம், வெள்ளாலகுண்டம், மல்லியக்கரை, களரம்பட்டி, தலையூத்து, வி.பி.குட்டை, அரசநத்தம், உடையாம்பட்டி, அம்மாபேட்டை காலனி, பொன்னம்மாபேட்டை, வீராணம், வலசையூர், அம்மாபேட்டை காந்தி மைதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க!

News November 10, 2025

கொளத்தூர்: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

image

சேலம், கொளத்தூர் அருகே சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ (16) என்ற மாணவி, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பாட்டியின் கண்டிப்பால் மனமுடைந்தவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!