News September 14, 2024
சேலம் அருகே விபத்து: ஒருவர் பலி

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஈஸ்வரி (45) தனது மகன் மணிகண்டன் (15) உடன் மொபட்டில் நிலவாரப்பட்டி உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை சர்வீஸ் சாலையில் ரோட்டை கடப்பதற்காக முயன்ற போது அவ்வழியே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!

சேலம் மாவட்டம், மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் மாணவியர்கள் சந்திப்பு இன்று பள்ளியில் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டியும், ஒருவருக் ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட 80 ஆரஞ்சு மிட்டாய்களையும் ஊட்டிவிட்டு அன்பை வெளிப்படுத்தி நினைவுகளைப் பகிர்ந்தனர்.
News August 24, 2025
சேலம் மாநகர காவல்துறை அறிவிப்பு!

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக Dash-Cam பொருத்துவது மிகவும் அவசியம். இது விபத்து நேரங்களில் ஆதாரமாகவும், குற்றச்செயல்களை தடுக்கவும், சாலை விதிமுறைகள் மீறப்படுவதை கண்டறியவும் உதவும். தங்கள் மற்றும் பிறர் உயிர் பாதுகாப்பிற்காக உங்கள் வாகனத்தில் Dash-Cam பொருத்துங்கள் என சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News August 24, 2025
சேலம்: மத்திய அரசு வேலை வேண்டுமா?

சேலம் மக்களே.. மத்திய அரசின் கீழ் செயல்படும் Uranium Corporation of India Ltd காலியாக உள்ள 99 Operational Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிப்ளமோ மற்றும் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,990 முதல் ரூ.40,000 வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <