News August 25, 2024

சேலம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

சேலம் மாவட்டம் சொக்கனூர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு கருப்பன் (65) என்பவர் பைக்கில் வீரகனூர் நோக்கி வரும் போது எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்த சொக்கனூர் மணிகண்டன் 45 என்பவர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த கருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் மனைவி இந்திரா இருவரும் காயமடைந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News April 5, 2026

சேலம்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

சேலம் மக்களே, தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News April 5, 2026

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம்: ரூ.24.71 கோடி அபராதம்

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2025-26 நிதியாண்டில் டிக்கெட் இன்றிப் பயணித்த 3.24 லட்சம் பேரிடம் ₹24.71 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12% அதிகம். பயணிகள் முறையான டிக்கெட் இன்றிப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

News April 5, 2026

சேலம்: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

சேலம் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!