News April 11, 2024
சேலம் அருகே வள்ளி கும்மியாட்டம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள பவளத்தானூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பொங்கல் வைபவம், கரகம் எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவையொட்டி, வள்ளி கும்மி, ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனமாடினார்.
Similar News
News February 6, 2026
சேலம்: POST OFFICE வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 6, 2026
சேலத்தில் லட்ச கணக்கில் பண மோசடி! ALERT

சேலம் ஆத்தூர் அருகே பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற மின்னஞ்சல் லிங்க்கை நம்பி, தனியார் பள்ளி ஆசிரியர் செல்வம் தவணை முறையில் ₹6.46 லட்சத்தை இழந்துள்ளார். மீண்டும் பணம் கேட்கப்பட்டபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 6, 2026
வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் ஆட்சியர்

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் விருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூகம் ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தர்ப்பூசணி ரசாயனம் கொண்டு பழுக்க வைத்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் அரசு விஞ்ஞானிகளும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும் இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டு தெளிவு படுத்தி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்


