News August 28, 2025
சேலம் அருகே நகைக்கடை உரிமையாளர் அடித்துக் கொலை!

சுக்கம்பட்டியை சேர்ந்தவர் நகை கடை உரிமையாளர் ரமேஷ் (35). இவர் குள்ளம்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடை அருகே நேற்று மது அருந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர் ரமேஷை கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் உயிர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 28, 2025
சேலம் கேஸ் சிலிண்டர் இருக்கா?

சேலம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனை மறக்காமல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க.
News August 28, 2025
சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு கூடுதல் பத்திரப்பதிவு

தமிழகத்தில் இன்றும் நாளையும் சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரப்பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அதிக அளவில் இருப்பார்கள் அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் இன்றும் நாளையும் கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 டோக்கன் முதல் 200 டோக்கன் ஆக அனுமதிக்கப்படும் என பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
News August 28, 2025
பிரச்சனைக்கு தீர்வு காண மனு வழங்க உடனே வாருங்கள்

சேலம் இன்று(ஆக.28) முகாம் நடைபெறும் இடங்கள்
▶️ துட்டபட்டி வெள்ளையன் மஹால் அருகில் துட்டப்பட்டி மேல்நிலைப்பள்ளி
▶️ ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை
▶️ தேவூர் அன்னம்மாள் கல்யாண மண்டபம் கனியாள்பட்டி
▶️ ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏற்காடு ▶️தலைவாசல் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் காட்டுக்கோட்டை▶️மேச்சேரி மல்லிகார்ஜுனா திருக்கோவில். இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!