News March 21, 2025
சேலம் அருகே துயர நிகழ்வு

சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஓட்டுநர் ஜெயவேல்(26) இன்று (மார்ச் 21)பள்ளி வேலை எடுத்துக்கொண்டு பணிக்கு செல்வதற்காக வேனை இயக்கிய போது தந்தையை பார்ப்பதற்காக ஒன்றரை வயது குழந்தை ரோஹித் ராஜ் வேனின் பின்புறம் வந்தது இதனை அறியாமல் வேனை பின்னோக்கி இயக்கியதில் சக்கரத்தில் நசுங்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Similar News
News March 22, 2025
சேலம்-காரைக்கால் ரயிலை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும்

நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பங்கேற்று பேசிய நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன், “சேலம்-கரூர், கரூர்-திருச்சி, திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயிலை இணைத்து சேலம்-காரைக்கால் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
News March 22, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
News March 22, 2025
சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும் ஏதேனும் விபத்துக்கள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும் இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி மார்ச் மாதம் 22ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது