News October 12, 2024

சேலம் அருகே கனமழை

image

ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கமாண்டபட்டி காமலாபுரம், மற்றும் புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. நீண்ட நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக அப்பகுதியில் இதமான சூழல் நிலவுகிறது.

Similar News

News August 26, 2025

ஆக.27-ல் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாளை (ஆக.27) நடக்கவிருந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும், என்ற சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்று நாளை நடக்கவிருந்த விளையாட்டு போட்டிகள் வரும் ஆக.30-ஆம் தேதி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

News August 26, 2025

சேலம் மக்களுக்கு மாநகர காவல் துறை சிறப்பு பரிசு அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களுடைய நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில் டேஷ் கேம் பொருத்தி அதனுடன் செல்பி போட்டோ எடுத்து, மாநகர காவல் துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பதிவிடுமாறும், முதலில் பதிவிடும் ஐந்து நபர்களுக்கு காவல் ஆணையரின் கைகளால் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்க சேலத்தில் 54,157 பேர்!

image

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு சேலம் மாவட்டத்தில் பள்ளி பிரிவில் 35,996 பேரும்,கல்லூரி பிரிவில் 7,633 பேரும்,மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2,165 பேரும்,அரசு ஊழியர்கள் பிரிவில் 1,625 பேரும், பொதுப்பிரிவில் 6,738 பேரும் என மொத்தம் 54,157 பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.

error: Content is protected !!