News April 23, 2025
சேலம்: அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.
Similar News
News April 23, 2025
மகளிர் விடுதிகள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்!

சேலம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்.126-ல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
News April 23, 2025
சேலத்தில் இலவச விளையாட்டு பயிற்சி முகாம்!

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஏப். 25 முதல் மே 15 வரை தடகளம், கால்பந்து, கைப்பந்து, கையுந்து பந்து, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு இலவச பயிற்ச்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ளோர் ஏப். 25 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம் என சேலம் கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News April 23, 2025
4 துறைகளில் நம்பர் ஒன்: சேலம் கோட்டத்திற்கு தேசிய விருது!

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்கு எரிபொருள் சேமிப்பு, பாதுகாப்பான இயக்கம், பஸ் பயன்பாடு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் முதல் பரிசு பெற்றுள்ளது. இதனால் சிறந்த போக்குவரத்து கழகம் என்ற பெயரை சேலம் கோட்டம் பெற்றுள்ளது.