News March 22, 2024
சேலம் : அதிமுக வேட்பாளர் விபரம்

சேலம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பி.விக்னேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். பெயர்: பி.விக்னேஷ், வயது: 31 கல்வித்தகுதி: பொறியியல் பட்டதாரி ஊர்: திண்டமங்கலம், தொழில்: விவசாயம் கட்சிப் பதவி: ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர். குடும்பம்: தந்தை பரமசிவம் (ஓமலூர் வடக்கு ஒன்றிய அதிமுக அவைத் தலைவர், தாய் தனபாக்கியம் திண்டமங்கலம் ஊராட்சித் தலைவர். மனைவி பிரியா, மகள் ரேஷ்னிகா (1).
Similar News
News October 26, 2025
சேலம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News October 26, 2025
சேலத்தில் இறைச்சிகளின் இன்றைய விலை நிலவரம்!

சேலத்தில் இறைச்சிகள் மற்றும் மீன் வகைகளின் இன்றைய விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளாட்டு கறி கிலோ ரூ.800, நாட்டுக்கோழி கறி கிலோ ரூ.500, பிராய்லர் கோழிக்கறி கிலோ ரூ.220, மேலும், கட்லா மீன் கிலோ ரூ.220, ரோகு மீன் கிலோ ரூ.200, பாறை மீன் கிலோ ரூ.180, மத்தி மீன் கிலோ ரூ.250, அயிலை மீன் கிலோ ரூ300 என்ற விலைகளில் மீன் வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊரில் இறைச்சி விலை என்ன?
News October 26, 2025
சேலம்: சிலிண்டர் மானியம் வருகிறதா?

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிகலாம்.SHARE பண்ணுங்க


