News November 26, 2025
சேலம்: அதிமுக பிரமுகர் கைது பரபரப்பு

சேலம் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சங்கர் என்கிற சேகோ சங்கர். இவர் ஆத்தூர் கோரி தெரு மல்லிகா கண்ணன் திருமண மண்டபம் அருகில் வசித்து வரும் திவ்யா என்கிற பாத்திமா என்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இன்று அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சங்கரை ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
Similar News
News December 3, 2025
சங்ககிரி அருகே கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்!

சங்ககிரி அருகே வளையசெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி ராஜாமணி (65) மற்றும் அவரது மனைவி புஷ்பவள்ளி (56) வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்றனர். ராஜாமணி, மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டதை கவனித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் அளித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

சேலம்: பெற்றோரைக் காண வந்த ஐடி ஊழியர் தற்கொலை!

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுலகண்ணன் (34), பெற்றோரைக் காண விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை உணவு உண்டுவிட்டு மாடி அறையில் உறங்கச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர் கதவை உடைத்து பார்த்ததில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.