News October 25, 2024

சேலம்: அதிமுக நகர செயலாளர் காலமானார்

image

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட தம்மம்பட்டி அதிமுக நகர செயலாளர் பதவி வகித்து வந்தவர் குமரன். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பால் இறந்தார். இவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தம்மம்பட்டியில் உள்ள பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அதிமுக கட்சிக்கு மிகவும் உழைத்தவர் என பொதுமக்கள் கூறினார்கள்.

Similar News

News August 27, 2025

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலை!

image

சேலம், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள148 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 29 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு. (SHARE பண்ணுங்க)

News August 27, 2025

பழங்குடி இன இளைஞர்களுக்கான வாய்ப்பு!

image

சேலம் மாவட்ட தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வீடியோ ஒளிப்பதிவு மற்றும் ஆடியோ வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 30 வயது வரை உள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பங்களை விண்ணப்பித்து பயனடையுமாறு, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.

News August 27, 2025

சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில்கள்!

image

சேலம் வழியாக வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.27, செப்.01, 06 தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.29, செப்.03, 08 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.

error: Content is protected !!