News June 4, 2024
சேலம்:நான்காவது சுற்று நிலவரம்

சேலம் மக்களவை தொகுதியில் 4-வது சுற்றில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 107884 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 95437 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.சேலம் மக்களவைத் தொகுதியில் 12447 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலை.
Similar News
News August 21, 2025
மேட்டூர் அணையின் 92-வது பிறந்தநாள் இன்று

தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று (ஆக.21) 92-வது பிறந்தநாள். தமிழகத்தின் மிகப்பெரிய அணை நமது மேட்டூர் அணை. அணையை கட்ட சுமார் 9 ஆண்டுகள் ஆனது. கடந்த 1934-ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. அணைக்கட்டும் பணியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
News August 21, 2025
சேலத்தில் வாலிபர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு குண்டாஸ்

கடந்த ஜூலை 15- ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த மதன்குமார் (25) என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கிராஜா (35), விக்னேஷ் (20), பிரவீன்ஷா (22), கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), முத்து ரிஷிகபூர் (28) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News August 21, 2025
சேலத்தில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சேலம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்