News March 25, 2024
சேலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறிய சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவர் உயிரிழந்துள்ளார். பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், கடந்த 24 மணி வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதல் மலை – குரங்கு பாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Similar News
News February 13, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (13.02.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News February 13, 2026
சேலம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 0427-2418735 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 13, 2026
JUST IN: சேலம் விஜய் கூட்டம் அருகே சடலம் மீட்பு!

சேலம்: சீலநாயக்கன்பட்டி அருகே கே.வி.பி திடலில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் போது சூரஜ் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


