News January 30, 2026

சேலத்தை அலற வைத்த சம்பவம்

image

சேலம் சூரமங்கலத்தில் உள்ள சேலத்தாம்பட்டியில் வெள்ளிக்கடை நடத்தி வரும் சுமதி என்பவர் கடையில் தனியாக இருந்தபோது, ஹெல்மெட் அணிந்த நபர் பொருள் வாங்குவது போல் நடித்து அவர் மீது மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயன்றார். சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் மர்ம நபர் தப்பியோடினார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 11, 2026

சேலம்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

சேலம் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

BREAKING: சேலத்தில் நாளை ஆட்டோக்கள் ஓடாது!

image

மத்திய அரசின் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.ஐ.டி.யு , எல்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் நாளை(ஜன.12) ஆட்டோக்கள் ஓடாது எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.

News February 11, 2026

சேலம் வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் குறுஞ்செய்தி வரும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!